ஹாரிஷ் ஜெயராஜ் மெல்லிய இசையில் ‘ஒரு மனம்’ பாடல்.. மீண்டும் வெளியிடப்பட்ட ‘துருவ நட்சத்திரம்’ லிரிக்கல் வீடியோ !

‘துருவ நட்சத்திரம்’ படத்திலிருந்து ஹாரிஷ் ஜெயராஜ் இசையில் ‘ஒரு மனம்’ பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்த படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், விநாயகன், திவ்யதர்ஷினி, முன்னா சைமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நடிகர் விக்ரம் உளவு அதிகாரியாக நடித்துள்ள இந்த படத்தில் ஹாலிவுட் நிகரான ஆக்சன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கடந்த 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படம் நீண்ட நாட்களாக பணிகள் நடைபெற்று வந்தது. அதனால் இந்த படம் சில ஆண்டுகளாக வெளியாகாமலேயே இருந்தது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் இப்படத்தின் பணிகள் விறுவிறுப்படைந்தது. விரைவில் வெளியாகவுள்ள இந்த படத்தின் அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் இரண்டாவது பாடல் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதேபோன்று முதல் பாடலான ‘ஒரு மனம்’ பாடல் ஏற்கனவே வெளியிடப்பட்டது ஹாரிஷ் ஜெயராஜ் மெலோடியாக உருவான இப்பாடலில் விக்ரமுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். ஆனால் தற்போது அவர் காட்சிகள் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக ரித்து வர்மா இருக்கும்படி காட்சிகள் மாற்றப்பட்டுள்ளது. தற்போது இந்த பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியிட்டுள்ளது. இந்த பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.