தீபாவளிக்கு வெளியாகும் துருவ நட்சத்திரம்?

தீபாவளிக்கு வெளியாகும் துருவ நட்சத்திரம்?

விக்ரம் நடிப்பில் உருவாகி கிடப்பில் போடப்பட்ட துருவநட்சத்திரம் திரைப்படம் தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியாகும் என கூறப்படுகிறது.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம், ‘துருவ நட்சத்திரம்’. கடந்த சில ஆண்டுகளாக வெளிவராமல் இருக்கும் இந்தப் படத்தில் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன் உட்படப் பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை வெளியிடுவதற்கான முயற்சியில் படக்குழு நீண்டகாலமாக ஈடுபட்டு வருகிறது. ஒருவழியாக தீபாவளிக்கு படம்வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இறுதிகட்ட பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதால் தீபாவளிக்கு இப்படத்தை திரைக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்று படக்குழு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

Share this story