துருவ நட்சத்திரம் படத்தின் முன்னோட்டம் வெளியானது

துருவ நட்சத்திரம் படத்தின் முன்னோட்டம் வெளியானது

பிரபல இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘துருவ நட்சத்திரம்’. விக்ரம் உளவு அதிகாரியாக நடித்துள்ள இந்த படத்தில் ஹாலிவுட் நிகரான ஆக்சன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கும் இந்தப் படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். இவர்களுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், விநாயகன், திவ்யதர்ஷினி, முன்னா சைமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்

இந்நிலையில், படத்தின் முன்னோட்டத்தை படக்குழு பகிர்ந்துள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. 

 

 

Share this story