'துருவ நட்சத்திரம்' படத்தில் ஜஸ்வர்யா ராஜேஷ் நீக்கமா ?... ரசிகர்கள் அதிர்ச்சி !
'துருவ நட்சத்திரம்' படத்தில் இருந்து ஐஸ்வர்யா ராஜேஷின் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்த படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். இவர்களுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், விநாயகன், திவ்யதர்ஷினி, முன்னா சைமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஹாலிவுட் படங்களுக்கு நிகராக உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் விக்ரம் உளவு அதிகாரியாக நடித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிய இந்த படத்தின் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து கடந்த 2018- ஆம் ஆண்டு இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதன்பிறகு ‘ஒரு மனம்’ பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஐஸ்வர்யா ராஜேஷின் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான ஹிஸ் நேம் இஸ் கான் பாடலில் கூட அவரது பெயர் இடம்பெறவில்லை. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.