‘துருவ நட்சத்திரம்’ படத்திற்கு கெடு- படம் வெளிவருமா?
1700752633737
விக்ரம்-கௌதம்மேனன் கூட்டணியில் ரிலீசுக்கு தயாராகியுள்ள படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்த படத்தை வெளியிட நிபந்தனையுடன் அனுமதியளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
கௌதம் மேனன் சிம்புவை வைத்து ஸ்டார் என்ற படத்தை இயக்க ரூ.2.4. கோடி ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளார். அவர் அந்த படத்தை முடிக்காததால், வாங்கிய தொகையை திரும்ப செலுத்த வேண்டும் என அந்த நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் நாளை காலை 10.30 மணிக்குள் ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு கௌதம் மேனன் பணத்தை திரும்ப கொடுத்தால் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை திரையிடலாம். இல்லையேன்றால் வெளியிட கூடாது என நிபந்தனை விதித்துள்ளது நீதிமன்றம்.