கமல்ஹாசன் AI படிக்க சென்றது இந்த படத்திற்காகவா? ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி..!

kamalhasan

உலகநாயகன் கமல்ஹாசன், மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அமெரிக்காவுக்கு ஏஐ டெக்னாலஜி படிக்க சென்றதாக கூறப்படும் நிலையில் அவர் டெக்னாலஜி படிக்க சென்றதே அவரது கனவு படத்திற்காக தான் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

உலகநாயகன் கமல்ஹாசன் கடந்த 1997 ஆம் ஆண்டு ’மருதநாயகம்’ என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்க திட்டமிட்டார். இதற்காக அன்றைய முதல்வர் கருணாநிதி மற்றும் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்த எலிசபெத் ராணி ஆகியவர்களுடன் பூஜை போட்டார்.

இந்த படத்தில் மருதநாயகம் கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடிக்க மேலும் இந்த படத்தில் விஷ்ணுவர்தன், சத்யராஜ், அம்ரிஷ் புரி, நஸ்ருதீன் ஷா உள்ளிட்ட பல பிரபல நடிகர்கள் நடிக்க இருந்தனர். 27 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட இந்த படம் 30 சதவீதம் முடிந்துவிட்டதாகவும், படத்தின் காட்சிகள் அனைத்தும் தன்னிடம் பத்திரமாக இருப்பதாகவும் சமீபத்தில் அவர் தெரிவித்துள்ளார்.


இந்த நிலையில், ’மருதநாயகம்’ படத்தை மீண்டும் தொடங்கினால், கமல்ஹாசன் அதே கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்ட நிலையில், தற்போது ஏஐ டெக்னாலஜி மூலம் அந்த கதாபாத்திரத்தை உருவாக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காகவே அவர் அமெரிக்கா சென்று ஏஐ டெக்னாலஜி படித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் கமல்ஹாசன் ’மருதநாயகம்’ படத்தின் பணிகளை மீண்டும் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது.

Share this story