'வாழ்வில் செய்த பயனற்ற செலவு' - முன்னாள் கணவரை சீண்டினாரா சமந்தா..?
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு மொழியில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழும் சமந்தாவிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர், பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்.
இந்நிலையில்,நடிகை சமந்தா, வருண் தவணுடன் நடித்துள்ள ‘சிட்டாடல்: ஹனி பன்னி’ வெப் தொடர் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. இதன் புரமோஷனுக்காக வருண் தவானும், நடிகை சமந்தாவும் கேள்விக் கேட்டுக்கொள்ளும் விதமாக நிகழ்ச்சி ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதன் முன்னோட்டம் இப்போது பிரைமில் வெளியாகியிருக்கிறது.
அதில், வருண் தவண், “உங்கள் வாழ்க்கையில் தேவையில்லாமல் எந்த விஷயத்துக்காக அதிகம் செலவு செய்திருக்கிறீர்கள்?" என சமந்தாவிடம் கேள்வி கேட்டார். அதற்கு சமந்தா, “அது என் ‘எக்ஸ்’-க்கு நான் செய்த விலைமதிப்பற்ற கிஃப்ட்'' என சிரித்துக்கொண்டே பதிலளித்துள்ளார். இந்த புரமோஷன் வீடியோ வைரலாகி வருகிறது.