ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவிற்கு திரிஷா மலேசியா சென்றாரா..? உண்மை இது தான்..!

1

ஜனநாயகன் பட இசைவௌியீட்டு விழா மலேசியாவில் நடைபெறும் சூழலில் அதில் பங்கேற்க நடிகை திரிஷாவும் சென்றது போன்று புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.மிலேசியாவுல 3 ஷா” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படங்களை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

நடிகர் விஜய் மற்றும் திரிஷாவை இணைத்து கிசுகிசுக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. 

உண்மை என்ன வென்றால்  திரிஷா பெயர் கொண்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தக் லைஃப் (Thug Life) திரைப்படத்தின் பிரமோஷனுக்காக மலேசியா சென்ற போது எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த புகைப்படமானது 2025 மே 31ம் தேதி இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டிருந்தது. ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச் 2025 டிசம்பர் 27ம் தேதி நடந்தது. எனவே, ஜனநாயகன் படத்திற்காக நடிகை திரிஷா சென்ற புகைப்படம் இது இல்லை என்பது உறுதியாகிறது.இதன் மூலம் பழைய புகைப்படங்களை தவறாக பதிவிடப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Share this story