‘லியோ’ தளபதி விஜய்க்கு மட்டும் 67வது படம் கிடையாதாம்?........ – வெளியான சுவாரசிய தகவல்.

photo

தளபதியின் 67வது படமாக தயாராகும் ‘லியோ’ திரைப்படத்தை பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கு வருகிறார். விஜய் மற்றும் திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை திரிஷா, அர்ஜூன், மிஷ்கின், கௌதம் மேனன், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த், மலையாள இளம் நடிகர் மேத்யூ தாமஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் படபிடிப்பிற்காக படக்குழு காஷ்மீர் சென்றுள்ளனர், இந்தபடத்தை எதிநேக்கி ஒட்டு மொத்த இந்திய ரசிகர்களும் காத்துள்ளனர். இந்த நிலையில் படம் குறித்த சுவாரசிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

photo

அதாவது இந்த திரைப்படத்திற்கான பெயரை அறிவிப்பதற்கு முன்பாக ரசிகர்கள்தளபதி 67’ என்ற பெயரிலேயே குறிப்பிட்டு வந்தனர். இந்த நிலையில் ருசீகர தகவல் ஒன்று வெளியாகியுள்ளது அதாவதுலியோவிஜய்க்கு மட்டுமல்ல திரிஷாவிற்கும் 67வது திரைப்படமாக அமைந்துள்ளதாம்நடிகை திரிஷா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, விக்ரம், அஜித், விஜய், ஆர்யா, தனுஷ் என அனைத்து கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடிபோட்டு  நடித்துள்ளார்.

photo

திரைதுறையில் சீனியர் நடிகையாக இருந்தாலும், இன்றும் அவரது முதல்படமான 'லேசா லேசா' படத்தில் பார்தது போல மிக இளமையாக உள்ளார். திரிஷா நடிப்பில் கடைசியாக 'ராங்கி' திரைப்படம் வெளியானது.  மேலும் அவர் நடித்த  'பொன்னியின் செல்வன் 2' மற்றும் 'தி ரோட்' ஆகிய படங்கள் வெளியீட்டிற்காக காத்திருக்கிறது.

Share this story