'டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் ஸ்னீக் பீக் காட்சி ரிலீஸ்...!
1748336872483

சந்தானம் நடித்துள்ள 'டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகி உள்ளது.
பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகி உள்ளது 'டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படம். இப்படத்தை ஆர்யாவின் தி ஷோ பீபல் நிறுவனம் தயாரித்தது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தில் சந்தானத்துடன் கீதிகா, செல்வராகவன், கவுதம் மேனன், நிழல்கள் ரவி, கஸ்தூரி, ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, யாஷிகா ஆனந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.