ஹரீஷ் கல்யாண் மீனவனாகவே வாழ்ந்திருக்கிறார்-டீசல் பட விமர்சனம்

diesel
இந்த தீபாவளி ரேஸில் களத்தில் குதித்து திரையரங்கில் வெற்றி நடை போட்டு வரும் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்துள்ள டீசல் படத்தின் விமர்சனம் பற்றி நாம் காணலாம் 
வடசென்னை கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்ட கச்சா எண்ணெய் குழாய்களின் பாதிப்பு காரணமாக, மீனவ சமூகம் தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற போராடுகிறது. காவல்துறை வன்முறையை கையாண்டு தோல்வியடைய செய்கிறது. குழாய் நடுவில் துளையிட்டு குருடாயில் திருடும் சாய் குமார், டீசல் மாஃபியாக்களை உருவாக்குகிறார். அதன்மூலம் கிடைக்கும் வருமானம், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. பெற்றோரை இழந்த ஹரீஷ் கல்யாணை சாய் குமார் வளர்க்கிறார்.
கெமிக்கல் இன்ஜினியரான ஹரீஷ் கல்யாண், தங்கள் பகுதியில் தனியார் துறைமுகத்தை கொண்டு வர திட்டமிடும் சச்சின் கெடேகரின் ஆட்டத்தை முடிக்க, சாய் குமாரின் டீசல் மாஃபியா தொழிலை தொடர்கிறார். அவருக்கு போட்டியாக போலீஸ் அதிகாரி விநய் ராய் ஆதரவுடன் களத்தில் குதிக்கும் விவேக் பிரசன்னாவுக்கும், ஹரீஷ் கல்யாணுக்கும் இடையே நடக்கும் ஆடுபுலி ஆட்டத்தின் முடிவு என்ன என்பது மீதி கதை. முதல்முறையாக முழுநீள ஆக்‌ஷன் அவதாரம் எடுத்துள்ள ஹரீஷ் கல்யாண், மீனவனாகவே வாழ்ந்திருக்கிறார்.
சண்டையிலும், நடனத்திலும் பின்னிப் பெடலெடுத்துள்ளார். சாய் குமார் உணர்ச்சிகரமான நடிப்பில் செம கெத்து காட்டியிருக்கிறார். வில்லத்தனத்தை ஸ்டைலாக வெளிப்படுத்திய விநய் ராய், அவரது அடியாள் போன்ற விவேக் பிரசன்னா கவனத்தை ஈர்க்கின்றனர்

Share this story