‘லியோ’ படத்துக்கு தடையாக இருக்கும் தில்ராஜூ- காரணம் என்ன?

photo

தளபதி விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள ‘லியோ’ படம் வரும் 19ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அந்த படம் ஆந்திராவில் வெளியாகுவதில் தயாரிப்பாளர் தில் ராஜூவால் சிக்கல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

photo

இதற்கு முன்னர் தளபதி விஜய் நடித்த வாரிசு படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூதான் தயாரித்திருந்தார். அந்த சமயம் தமிழக வெளியீட்டு உரிமையை செவன் ஸ்கீரின் நிறுவனம் கைப்பற்றி இருந்தனர். அப்போது தில் ராஜூவுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட தில்ராஜூ ‘லியோ’ படத்தின் ஆந்திர வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய சித்தாரா எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனத்துக்கு  அழுத்தம் கொடுக்கிறாராம்.

மேலும் சில மல்டிபிளக்ஸ் திரையரங்கை தனது கட்டுபாட்டில் வைத்துக்கொண்டு சிரமம் கொடுப்பதாக கூறப்படடுகிறது. இதனால் ஆந்திராவில் விஜய்யின் லியோ வெளியாகுமா? ஆகாதா? என்ற நிலை நீடிக்கிறது. தொடர்ந்து செவன் ஸ்கீரின் தலைவர் லலித் குமார், தில் ராஜூவை சந்தித்து பேச உள்ளாராம்.

Share this story