ரியல் ஹீரோவாக மாறிய இசையமைப்பாளர் ‘டி. இமான்’.

photo

இசையமைப்பாளராக நமக்கு நன்கு பரிச்சயமான டி.இமான். தற்போது ஹீரோவாக மாறியுள்ளார், அதுவும் ரீலாக இல்லை ரியலாக.

photo

தளபதி விஜய்யின் ‘தமிழன்’ படம் மூலமாக இசையமைப்பாளராக சினிமாவில் நுழைந்தவர் டி.இமான். தொடர்ந்து பல நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இடத்தை பிடித்தார். இவர் மோனிகா ரிச்சர்டு என்பவரை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்தார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கிட்ட தட்ட 13 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இந்த ஜோடி சிலபல காரணங்களால் விவாகரத்து செய்து பிரிந்தனர். தற்போது டி. இமான் அமீலா என்பரை இரண்டாவதாக திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.

photo

இந்த நிலையில் கடலூர், நெய்வேலி, மந்தாரக்குப்பம் அருகே உள்ள பெரியாக்குறிச்சி பகுதியியல் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அப் பகுதியில்  முற்றிலும் சேதமடைந்த ஆறு நபர்களின் வீடுகளை தன்னார்வலராக செயல்பட்டு இரண்டு லட்சம் செலவீட்டில் டி.இமான்  சீரமைத்து, தார்பாய்கள் வழங்கி, இரவு நேர பாடசாலை அமைத்து கொடுத்துள்ளார். இதனை அப்பகுதி மக்கள் பாராட்டி அவருக்கு பாசி மணிகளை அணிவித்து நன்றி தெரிவித்தனர். பலரும் டி.இமானின் இந்த ரியல் ஹீரோயிசத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Share this story