முதலவர் நிவாரண நிதிக்கு, பெரிய தொகையை வழங்கிய இயக்குநர் 'அமீர், பூச்சி முருகன்'.

photo

மிக்ஜாம் தனது கோர முகத்தை காட்டி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை அலறவிட்ட நிலையில் தமிழக அரசும், தன்னார்வ அமைப்புகளும் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து மீட்டனர். தற்போது அரசு பாதிக்கப்பட்ட குடும்பங்கலுக்கு நிவாரண நிதியாக ரூ.6000 வழங்கி வருகிறது.


இந்த நிலையில் தொடர்ந்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பல பிரபலங்கள், அரசியல் அமைபுகள் தங்களால் முடிந்த தொகையை வழங்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திரைப்பட இயக்குநர் அமீர் முதல்வரிடம் ரூ. 10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். தொடர்ந்து நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் பூச்சி முருகன் தனது ஒரு மாத ஊதியத்தை கொடுத்துள்ளார்.

இது குறித்து முதல்வர் அலுவலம் தனது எக்ஸ் பக்கத்தில் “திரைப்பட இயக்குநரும், நடிகருமான திரு. அமீர் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின்  அவர்களை சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 10 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.” என பதிவிட்டுள்ளனர்.

Share this story