இயக்குநர் சேரன் வீட்டில் நடந்த துக்கம்.

photo

இயக்குநரும், நடிகருமான சேரனின் தந்தை எஸ்.பாண்டியன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 84.

photo

வித்தியாச திரைக்கதை மூலமாக ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குநர் சேரன். பாரதி கண்ணம்மா படத்தை இயக்கி இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமான சேரன், தொடர்ந்து ஆட்டோகிராப், சொல்ல மறந்த கதை, தவமாய் தவமிருந்து, மொக்கிஷம், ராமன் தேடிய சீதை, யுத்தம், திருமணம் உள்ளிட்ட படங்களில் இயக்கி, நடித்தும் உள்ளார். இவர் ஒரு இயக்குநர், நடிகர் என்பதை தாண்டி தயாரிப்பளராகவும் வலம்வருகிறார். இவர் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.

photo

திருமணம் எனும் படத்தை 2019ஆம் ஆண்டு முடித்துவிட்டு தொடர்ந்து இயக்கத்திற்கு பிரேக் விட்ட சேரன் தமிழ் குடிமகன் படத்தில் நடித்திருந்தார். தற்போது கிச்சா சுதீப்பை வைத்து படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த நிலையில் சேரனின தந்தை எஸ்.பாண்டியன் உடல்நலக்குறைவால் காலமானார். அவர் தியேட்டர் ஆப்பரேட்டராக பணியாற்றியவர். அவரது மரணம் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தொடர்ந்து பலரும் சேரனுக்கு ஆறுதல் கூறிவருகின்றனர்.

Share this story