இயக்குநர் மாரிசெல்வராஜின் அடுத்த படம் குறித்த தகவல்.

photo

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு நாளை வெளியாகவுள்ளது. அதற்கான அறிவிப்பு போஸ்டர் தற்பொழுது வெளியாகியுள்ளது.

photo

பரியேறும் பெருமாள்என்னும் தனது முதல் படத்திலேயே ஒட்டு மொத்த கோலிவுட் இயக்குநர்களையும் திரும்பி பார்க்கவைத்த இயக்குநர் மாரிசெல்வராஜ். தனது முதல் படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து தனுஷை வைத்து தனது இரண்டாவது படமான  ‘கர்ணன்திரைப்படத்தை இயக்கினார். இந்த படமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க தற்பொழுது உதயநிதி ஸ்டாலினை வைத்துமாமன்னன்என்கிற புதிய படத்தை இயக்கி வருகிறார். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அண்மையில் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரொடக்க்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதையடுத்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

photo

இந்நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் தான் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு தொடர்பான போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.  அதோடு ‘நாளை பால்யத்தை நோக்கி’ என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

photo

டிஸ்னி ஹாட்ஸ்டார் தயாரிக்கும் இப்படத்தில் நிகிலா விமல், கலையரசன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து படம் குறித்த மற்ற தகவல் நாளை வெளியாகும். மாரிசெல்வராஜின் நான்காவது படமாக இந்த படம் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this story