‘எவ்வளவு உயர பறந்தாலும் பசித்தால் கீழே வந்துதான் ஆக வேண்டும்’ – சர்ச்சை வளையத்துக்குள் சிக்கிய ரத்னகுமார்.

லியோ பட வெற்றி விழா கொண்டாட்டத்தில் விஜய் சொல்லிய கதை என பலரின் பேச்சு கவனத்தை ஈர்த்தாலும், இயக்குநர் ரத்னகுமாரின் பேச்சு சர்சையாகியுள்ளது. அவரை ஒரு சாரார் ஆதரித்தும், ஒரு சாரார் ரோஸ்ட் செய்தும் வருகின்றனர்.
‘மேயாத மான்’ படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் ரத்னகுமார். இவர் மாஸ்டர், லியோ உள்ளிட்ட படங்களில் வசனகர்த்தாவாக பணியாற்றியுள்ளார். இவர் லியோ பட வெற்றி விழாவில் பேசியதாவது” நான் விஜய்யின் தீவிர ரசிகன் அவரால் தான் சினிமாவுக்கே வந்தேன். மாஸ்டர் படத்தில் வாத்தி ரெய்டு பாடல் அப்போதைய சூழ்நிலைக்கு தகுந்தாற்ப்போல எழுதியிருந்தோம். அப்போது படப்பிடிப்பு தளத்திற்கே ரெய்டு வந்துவிட்டனர். தற்போது லியோ படத்தில் ‘நான் ரெடி தான் வரவா’ பாடல் இந்த பாடல் என்னவாக மாறியிருக்கு என்று நமக்கு தெரியும், விஜய் அனைவரையும் மதிக்க தெரிந்த மனிதர். யார் அவரிடம் போய் பேசினாலும் உட்காரவைத்துதான் பேசுவார். அனைவரையும் சமமாக பார்க்கும் எண்ணம் கொண்டவர் நடிகர் விஜய். என்னதான் உயர பறந்தாலும் பசித்தால் கீழே வந்துதான் ஆக வேண்டும்” என ரத்னகுமார் பேசியிருந்தார்.
அவரது இந்த பேச்சு இணையத்தை பற்ற வைத்துள்ளது. கழுகு, காக்கா கதையை ‘ஜெயிலர்’ பட ஆடியோ லான்ச்சில் ரஜினி கூறியதை குறிப்பிட்டுதான் ரத்னகுமார் இப்படி பேசியுள்ளார் என குறிப்பிட்டு, விஜய்யின் அடுத்த படத்தை இயக்க இப்படியா ஐஸ் வைப்பது? என ஒரு சாரார் அவரை ரோஸ்ட் செய்து வருகின்றன்ர். மற்றொரு புறம் சூப்பர் அண்ணா என விஜய் விசிறிகள் அவரை கொண்டாடி வருகின்றனர்.