திருவண்ணாமலையில் 'இயக்குநர் வம்சி' – 'வாரிசு' படத்திற்கு பேராதரவு கொடுத்த தமிழக மக்களுக்கு நன்றி என பேட்டி.

PHOTO

விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம் கடந்த  11அம் தேதி வெளியாகி பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில், இந்த படத்தின் இயக்குநரான வம்சி பைடிபள்ளி இன்று பஞ்ச பூத தலங்களில் அக்னிதலமாக விளக்கும் திருவண்ணாமலை அண்ணாமலையாரை தரிசனம் செய்துள்ளார்.

photo

தனது குடும்பத்தினர்கள் மற்றும் படக்குழுவினருடன் சாமி தரிசனம் மேற்கொண்டார் இய்க்குநர் வம்சி, தொடர்ந்து அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்து பிரசாதம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு வம்சி பேட்டியளித்தார், அதி அவர் கூறியதாவது “வாரிசு திரைப்படத்திற்கு தமிழக மக்கள் வெற்றியை பெற்று கொடுத்துள்ளனர், மக்கள் தனக்கு அளித்த ஆதரவிற்கு மனமார்ந்த நன்றி” என தெரிவித்துள்ளார். 

photo

தொடர்ந்து வம்சியுடன் அவரது ரசிகர்கள் பலர் செல்ஃபி எடுத்துக்கொண்டனர், இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Share this story