அந்த மனசுதான் சார் கடவுள்……..- தனது உதவி இயக்குநர்களுக்கு நிலம் வாங்கிக்கொடுத்த வெற்றிமாறன்.

photo

வெற்றிமாறன் ஒரு மிகச்சிறந்த இயக்குநர்  என்பது நமக்கு தெரியும், தற்போது அவர் ஒரு படி மேலேப்போய்;அந்த மனசுதான் சார் கடவுள், என பலரும் பாராட்டும்படியான விஷயம் ஒன்றை செய்துள்ளார்.

photo

அதாவது வெற்றிமாறன் தற்போது ‘விடுதலை’ படத்தை இயக்கியுள்ளார். இரண்டு பாகங்களாக தயாராகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் வரும் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் வெறிமாறன் திரையில் மட்டும் தரமான சம்பவங்களை படைப்பதில்லை, நிஜவாழ்கையிலும் அவர் அப்படிதான் என்பதை காட்டுகிறது அவர் செய்துள்ள செயல். அதாவது, தனது உதவி இயக்குநர்கள் சுமார் 25 நபர்களுக்கு செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூர் அருகே ஆளுக்கு ஒரு கிரவுண்ட் நிலம் வங்கி கொடுத்துள்ளாராம் வெற்றிமாறன்.

photo

இதனை அறிந்த சினிமா வட்டாரம் மற்றும் ரசிகர்கள் வெற்றிமாறனை என்னா….. மனுஷய்யா. அந்த மனசுதான் சார் கடவுள்…என கொண்டாடி வருகின்றனர்.

Share this story