‘மீதி வாழ்க்கையையும் தொலைத்து விடாதீர்கள்’ - செல்வராகவனின் திடீர் அட்வைஸ் !

selvaraghavan

ரசிகர்களுக்கு இயக்குனர் செல்வராகவன் திடீரென அட்வைஸ் ஒன்றை கொடுத்துள்ளார். 

செல்வராகவன் தமிழ் சினிமா இயக்குநர்களில் முக்கியமானவர். தனது அப்பா இயக்குனராக இருந்தாலும் செல்வராகவன் தனது தனித்திறமை நிரூபித்தே இதுவரை வளர்ந்து வந்துள்ளனர். செல்வராகவன் தனது படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் புதிய புரட்சியை ஏற்படுத்தினார்.

selvaraghavan

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் அவரது தம்பி தனுஷை வைத்து ‘நானே வருவேன்’ படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் போதிய வெற்றியை பெறவில்லை. அதேநேரம் நடிகராகவும் களமிறங்கி நடித்து வருகிறார். 

இந்நிலையில் ரசிகர்களுக்கு திடீரென அட்வைஸ் ஒன்றை இயக்குனர் செல்வராகவன் கொடுத்துள்ளார். அதில், எவ்வளவோ திறமை இருந்தும் சோம்பேறித்தனத்தால் முடங்கி கிடந்து , வாழ்க்கையில் ஜாலியாய் இருக்க வேண்டும் என சுற்றித் திரிந்து , காலம் முழுவதையும் வீணடித்து விட்டு “ கடவுள் எனக்கு மட்டும் ஏன் கொடுக்கலன்னு தெரியல “ என மீதி வாழ்க்கையையும் தொலைத்து விடாதீர்கள் - அனுபவம் என்று தெரிவித்துள்ளார். எதற்காக இப்படியொரு அட்வைஸ் திடீரென அவர் கொடுத்துள்ளார் என்று ரசிகர்கள் குழம்பி வருகின்றனர். 


 

Share this story