தனுஷ் நடித்​துள்ள ‘கர’ படம் பற்றி இயக்குனர் என்ன சொல்கிறார் தெரியுமா ?

dhanush

தனுஷ் நடித்​துள்ள ‘கர’ படத்தை ‘போர் தொழில்’ பட இயக்​குனர் விக்​னேஷ் ராஜா இயக்​கி​யுள்​ளார். மமிதா பைஜு, கே.எஸ்​.ரவி​கு​மார், ஜெய​ராம், கருணாஸ், சுராஜ் வெஞ்​சரமூடு, பிருத்வி பாண்​டிய​ராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.​வி.பிர​காஷ் குமார் இசையமைத்​துள்ளார். வேல்ஸ் இன்டர்நேஷனல் மூலம் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். ஏப்​.30-ல் வெளி​யாகும் இப்​படம் பற்றி இயக்​குனர் விக்​னேஷ் ராஜா கூறிய​தாவது:

செல்போன் இல்லாத காலத்தில் 1991-ல் ராம​நாத​புரம் மாவட்​டத்​தில் நடப்​பது போன்ற கதையாக இப்படத்தை உருவாக்கியுள்ளேன். உண்மை சம்பவத்தின் பின்னணியில் இந்த கதை இருக்கும். படத்தில் அரசியல் இருக்கிறது. ஆனால் அதுவே முழு படம் கிடையாது. 7 கதா​பாத்​திரங்​களை மையப்​படுத்​திய கதை. ஒவ்​வொரு கதா​பாத்​திரத்​துக்​கும் முக்​கி​யத்​து​வம் உண்​டு. இந்​தப் படத்​தில் எமோஷனல் காட்​சிகள் அதி​கம் இருக்​கும். வன்​முறை காட்​சிகள் இருக்​காது.

Share this story