நடிகர் அஜித்தை புகழ்ந்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்...!

ak

நடிகர் அஜித்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் புகழ்ந்து பதிவிட்டுள்ளார். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ஏப். 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. சில நாள்களுக்கு முன் வெளியான படத்தின் டீசர் ரசிகர்களைக் கவர்ந்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதனிடையே, பட வேலைகளை முடித்த நடிகர் அஜித், கார் ரேஸிங்கில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். அஜித்தின் கார் விடியோக்களைப் பகிர்ந்துள்ள இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், 


உங்களது கடின உழைப்புக்கும் விடாமுயற்சிக்கும் பலன் கிடைக்கும் சார். இது மிகவும் கடினமான விடாமுயற்சியுள்ள ஒரு விளையாட்டு. நீங்கள் இதற்காக உங்களை அர்பணித்ததும் கடினமாக உழைத்ததுக்கும் மிகவும் பெரிய விஷயம். உங்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தும் கிடைக்க வேண்டும் சார். உங்களை நேசிக்கிறேன் சார் எனப் பதிவிட்டுள்ளார்.

Share this story