பாசமிகு அம்மா.. வெற்றிகளை குவிக்கும் மகன்கள்.. பூரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் !

தனது மகன்கள் விளையாட்டு போட்டிகளில் ஜெயித்ததை பூரிப்புடன் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குனராக செயல்பட்டு வருகிறார். ‘3’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர், அடுத்து ‘வைராஜா வை’ இயக்கினார். இந்த இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த இரண்டு படங்களுக்கு பிறகு நீண்ட இடைவெளியில் ‘லால்சலாம்’ படத்தை இயக்கவுள்ளார். இதில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார். நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாகவும், விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளனர். லைக்கா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார். கிரிக்கெட் கதைக்களத்தை கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
இதற்கிடையே கடந்த 2004-ஆம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். பல ஆண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த இரு ஆண்டுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக பரஸ்பரமாக பிரிந்தனர். இந்த தம்பதிக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சி பதிவை ஒன்றை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். அதில், பள்ளியில் நடைபெற்ற ஓட்டப்பந்தய போட்டியில் வெற்றிப்பெற்ற தனது மகன்களான லிங்கா மற்றும் யாத்ரா புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதோடு எந்த சூரியனும்.. இந்த குழந்தைகளின் விளையாட்டு மீதான உற்சாகத்தை நிறுத்த முடியாது. காலை சூரிய ஒளியின் பிரகாசத்தில் ஓடுகிறார்கள். என் மகன்களின் பிரகாசத்தை கண்டு சிரித்தப்படி நிற்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர்.
No amount of ☀️ sun..could stop these kids’ spirit of sportsmanship fun..
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) February 25, 2023
They ran and tan in the morning 🌞 sunshine..
While I stood there basking and smiling at my sons shine ✨ #sportsday #aboutlastmorning #sons 🧡🧡 pic.twitter.com/WU6OBpHv3T