'டிமான்டி காலனி 3' பட பணிகளை தொடங்கிய இயக்குனர் அஜய் ஞானமுத்து...!

ajay

டிமான்டி காலனி 3' பட பணிகளை இயக்குனர் அஜய் ஞானமுத்து தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கடந்த 2015-ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹாரர் திரில்லர் கதை களத்தில் வெளியான படம் 'டிமான்ட்டி காலனி”. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அருள்நிதி நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதைத்தொடர்ந்து 8 ஆண்டுகள் கழித்து 'டிமான்ட்டி காலனி 2' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது.இந்த படத்தில் அருள்நிதியுடன் இணைந்து பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், விஜே அர்ச்சனா, மினாட்சி கோவிந்தராஜன், முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.  இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.



 
'டிமான்ட்டி காலனி 2' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் மூன்றாம் பாகம் வெளியாகும் என இயக்குனர் அஜய் ஞானமுத்து அறிவித்தார். அதன் படி தற்போது,  இயக்குனர் அஜய் ஞானமுத்து  'டிமான்டி காலனி 3' பட பணிகளை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முந்தைய இரு பாகங்களை விட மூன்றாம் பாகம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளதாகவும், ஜப்பானில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

Share this story