'நடிகர் விமலை' வைத்து 'அஜித்'தை சீண்டும் 'இயக்குநர் அமீர்'.

photo

கோலிவுட்டில் தனக்கான இடத்தை  பெற போராடும் நடிகர்களுள் முக்கியமானவர் நடிகர் விமல். ஆரம்ப காலத்தில் பெயர் குறிப்பிடாத கதாப்பாத்திரங்களில் நடித்த இவர் பின்னர் சிறுசிறு கதாப்பாத்திரங்களில் நடித்து, ‘களவாணி’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் நடித்தார். அதில் சில படங்களில் இவரது நடிப்பு மக்கள் மத்தியில் பேசப்பட்டு நல்லவரவேற்பை பெற்றது. சில படங்கள் அதை பெற தவறியது. இந்த நிலையில் தற்போது விமல் நடிப்பில ‘குலசாமி’ திரைப்படம் தயாராகியுள்ளது. இந்தப் படத்தில் விமல் ஜோடியாக தான்யா ஹோப் நடித்துள்ளார். இவர்களுடன் ரிட்டையர்டு ஐபிஎஸ் ஆபிஸர் எஸ்.ஆர். ஜாங்கிட் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சக்திசரவணன் இயக்கியுள்ள இப்படம்  வரும் 21ம் தேதி வெளியாகவுள்ளது.

photo

இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடந்தது, அதில் இயக்குநர் அமீரும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அதேநேரம் நடிகர் விமலும், நாயகி தான்யா ஹோப்பும் இதில் பங்கேற்கவில்லை. அந்த விழாவில் பேசிய அமீர்” இயக்குநர் சரவண சக்தி என்னுடைய நண்பர், நான் நடிக்கும் ஒரு படத்தில் உடன் நடிக்கும் சகோதரர். ஒரு இயக்குநர் நடிகராகும் போது சில சங்கடங்கள் இருக்கும் அதை தீர்த்து வைத்தது சரவண சக்தியும், அண்ணாச்சியும் தான். என்னை மிக மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டார்கள். சரவண சக்தி மிகச்சிறந்த திறமையாளர்நாயகன் விமல், இந்த விழாவில் பங்கேற்காமல் போனது தவறானது. என்ன வேலை இருந்திருந்தாலும் கண்டிப்பாக வந்திருக்க வேண்டும். அவர் வராமல் இருப்பதை பார்க்கும் போது வேதனையாக உள்ளது.

photo

அத்தனை நட்சத்திரங்கள் நடித்த பொன்னியின் செல்வன் படத்திற்கே புரொமோஷன் தேவைப்படுகிறது. நடிகர் விமல் இதில் கலந்துகொள்ளாதது நல்லதாக தெரியவில்லை. ஏற்கனவே நடிகர் அஜித் தனது படங்களின் ப்ரொமோஷனுக்கு செல்வதில்லை என சொல்லப்படுகின்றன. “ என விழாவில் விமலுக்காக நடிகர் அஜித்தை குறிப்பிட்டு அமீர் பேசியுள்ளார். இதனை பார்த்த அஜித் ரசிகர்கல் அவரை ஏன் தேவையில்லாமல் சீண்ட வேண்டும் என சீறி வருகின்றனர். 

Share this story