"வளர்ந்துட்டு வாங்க கண்டிப்பா ரமணா 2 பண்ணலாம்..." : சண்முக பாண்டியனிடம் கூறிய இயக்குனர் ஏ. ஆர் முருகதாஸ்...!

armurugados

 சினிமாவில் வளர்ந்துட்டு வாங்க கண்டிப்பா ரமணா 2 பண்ணலாம் என சண்முக பாண்டியனிடம் இயக்குனர் ஏ. ஆர் முருகதாஸ் கூறியுள்ளார். 


அறிமுக இயக்குநர் அன்பு எழுதி இயக்கியுள்ள படைத்தலைவன் படத்தில் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் கஸ்தூரி ராஜா, முனிஷ்காந்த், வெங்கடேஷ், யாமினி சந்தர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். படைத்தலைவன் படத்தின் ஆடியோ லாஞ்ச் நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குநர் அன்பு, சசிக்குமார், ஏ. ஆர் முருகதாஸ், கஸ்தூரி ராஜா, பிரேமலாதா விஜயகாந்த், விஜய பிரபாகரன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ், ”ஏராளமான படங்களில் நடிகருக்கு நிகராக வில்லன்கள் அழகாக இருக்கும் டிரெண்டை செட் செய்தவர் விஜயகாந்த் தான். அதற்கென ஒரு பெரிய நம்பிக்கை வேண்டும், அதை விஜயகாந்த் அவர்கள் செய்தார், vijayakanth

எல்லோரும் விஜயகாந்த் குறித்து பேசி இருப்பார்கள். ஆனால் அவருடன் பணியாற்றிய அனுபவம் எனக்கு இருக்கிறது. நான் மட்டும்தான் விஜயகாந்த் உடன் பணியாற்றியுள்ளேன் என்று நினைத்தேன். ஆனால் கஸ்தூரி ராஜாவும் பணியாற்றியதாக கூறியபோது சற்று பொறாமையாக இருந்தது" என கூறினார்.  



மேலும் தனது திருமணத்தின் போது விஜயகாந்த் அங்கு வந்தபோது பெரிய அளவிலான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையும் அவரை காண ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அங்கு குவிந்தது, ``விஜயகாந்தின் விடாமுயற்சியும், கடின உழைப்பும் சண்முக பாண்டியனுக்கு வேண்டும். தமிழ்நாடு மக்கள் கண்டிப்பாக உங்களை கைவிட மாட்டார்கள். இவ்வளவு கம்பீரமான நடிகர் அவர்களுக்கு கிடைத்திருக்கிறார். விஜயகாந்தின் இரு கண்கள் அப்படியே சண்முக பாண்டியனுக்கு உள்ளது. சினிமாவில் வளர்ந்து வாருங்கள்... கண்டிப்பாக ரமணா 2 படம் எடுக்கலாம்" என இயக்கநர் ஏ ஆர் முருகதாஸ் பேசினார். 

Share this story