சொகுசு கார் வாங்கிய இயக்குநர் ஏ.ஆர்முருகதாஸ்.

சொகுசு கார் வாங்கிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் ஏ.ஆர்.முருகதாஸ். கமர்ஷியல் திரைப்படங்களை இயக்கி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெறும் இயக்குநர் முருகதாஸ். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் ஏ.ஆர்.முருகதாஸ். தமிழ், தெலுங்கு, இந்தி என பலமொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவரது திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்தது. ஆனால் கடைசியாக அவர் இயக்கிய மகேஷ் பாபுவின் 'ஸ்பைடர்' மற்றும் ரஜினியின் 'தர்பார்' ஆகிய திரைப்படங்கள் போதிய வெற்றியை பெறவில்லை. 

சொகுசு கார் வாங்கிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்

தற்போது அவர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் புதிய பி.எம்.டபிள்யூ காரை வாங்கி இருக்கிறார். இந்த காரின் விலை ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் ஆகும். 
 

Share this story