இரண்டாவது திருமணம் செய்துக்கொண்ட உதயநிதி பட இயக்குனர்...

arunraja kamaraj

பிரபல இயக்குனரான அருண் ராஜா காமராஜ் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழ் சினிமாவில் பன்முக திறமைக்கொண்டவர் இயக்குனர் அருண்ராஜா காமராஜ். தனது வித்தியாசமான நடிப்பாலும், பாடலாலும் ரசிகர்களை கவர்ந்தவர். சிவகார்த்திகேயன் தயாரித்த ‘கனா’ என்ற படத்தை இயக்கி ரசிகர்களிடையே அனைவரின் பாராட்டையும் பெற்றவர். இதையடுத்து உதயநிதி நடிப்பில் அவர் இயக்கிய 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. 

இருந்த அருண்ராஜா காமராஜாவும், அவரது மனைவி சிந்துஜாவுக்கும் கொரானா தொற்று உறுதியானதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருண்ராஜா காமராஜின் மனைவி, சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதையடுத்து சிந்துஜாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இதற்கிடையே கடந்த ஆண்டு கொரானா காலத்தில்  அருண்ராஜா காமராஜாவுக்கும், அவரது மனைவி சிந்துஜாவுக்கும் கொரானா தொற்று ஏற்பட்டது. இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்  அருண்ராஜா காமராஜ் பூரண குணமடைந்தார். ஆனால்  மனைவி சிந்துஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. 

மனைவி இல்லாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனிமையில் இயக்குனர் அருண்ராஜா காமராஜர் தவித்து வந்தார். இந்நிலையில் பெற்றோரின் வற்புறுத்திலின் ஒரு பெண்ணை கடந்த 29-ஆம் தேதி அருண் ராஜா காமராஜ் திருமணம் செய்து கொண்டார். எளிமையாக நடைபெற்ற இந்த திருமணத்தில் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை அருண் ராஜ  காமராஜ் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Share this story