ஹாலிவுட்டிலிருந்து கால் வந்ததுக - இயக்குநர் அட்லீ
ஜவான் பட வெளியீட்டுக்கு பிறகு ஹாலிவுட்டில் இருந்து அழைப்பு வந்ததாக இயக்குநர் அட்லீ தெரிவித்துள்ளார்.
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் அண்மையில் வௌியாகி அதிரடி கிளப்பி வரும் திரைப்படம் ஜவான். ரெட் சில்லி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தில் நயன்தாரா நாயகியாகவும், விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், பிரியாமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இத்திரைப்படம் கடந்த 7-ம் தேதி வௌியாகி சுமார் 900 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. மேலும், ஏராளமான திரைப்பிரபலங்கள் அட்லீ மற்றும் ஷாருக்கானுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜவான் பட வெளியீட்டிற்கு பிறகு ஹாலிவுட் திரையுலகில் இருந்து அழைப்பு வந்ததாக இயக்குநர் அட்லீ, பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஹாலிவுட்டில் திரைப்படம் இயக்க அழைப்பு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால், ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.