இயக்குனர் அட்லீ மீது கதை திருட்டு புகார்... அதிரடி முடிவெடுத்த தயாரிப்பாளர் சங்கம் !

atlee

கதை திருட்டு புகாரில் சிக்கிய இயக்குனர் அட்லீ மீது நடவடிக்கை குறித்து தயாரிப்பாளர் சங்கம் முக்கிய முடிவு எடுத்துள்ளது. 

பிரபல இயக்குனரான அட்லி, தற்போது பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது. 

atlee

விஜய்காந்த் நடிப்பில் வெளியான ‘பேரரசு’ கதையை தான் தற்போது ‘ஜவான்’ என்ற பெயரில் திரைப்படமாக அட்லி எடுத்து வருவதாகவும், அது குறித்து விசாரிக்கவேண்டும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் புகார் அளித்தார். இதனால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது. 

atlee

இது குறித்து விசாரிக்க இன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. அப்போது ‘ஜவான்’ படத்தின் கதை குறித்து விசாரிக்கப்பட்டது. இறுதியில் ஜவான் மற்றும் பேரரசு ஆகிய இரு படங்களும் வெவ்வேறு கதை என்று உறுதியானது. இதனால் அட்லி குறித்து வெளியான தகவல் முற்றிலும் தவறானது என்று தயாரிப்பாளர் சங்கம் கூறியுள்ளது. 

 

Share this story