ஆயிரம் கோடி டைரக்டராக மாறிய அட்லீ -எப்படி தெரியுமா ?

atlee

இயக்குனர் அட்லீ தமிழில் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார் .பின்னர் அவரிடமிருந்து எந்திரனுக்கு பிறகு வெளியேறி இயக்குனர் அவதாரம் எடுத்தார் .அவர் முதலில் ராஜா ராணி என்ற படத்தை இயக்கினார் .பின்னர் விஜய் நடிப்பில் தெறி ,பிகில் ,மெர்சல் போன்ற படங்களை இயக்கி வெற்றி பெற்றார் 
தமிழில் இருந்து பாலிவுட்டுக்கு சென்ற அட்லீ, அங்கு ஷாருக்கான் ரசிகர்களை மெர்சலாக்கும் வகையில் ஜவான் என்கிற அதிரடி ஆக்ஷன் படத்தை கொடுத்து பாலிவுட்டை மிரள வைத்தார். இதுவரை 33 ஆண்டுகளாக பாலிவுட்டில் நடித்து வரும் ஷாருக்கான், பல ஜாம்பவான் டைரக்டர்களுடன் பணியாற்றி இருந்தாலும், அவர்களால் பெற்றுத்தர முடியாத தேசிய விருதை ஜவான் படம் மூலம் பெற்றுத் தந்தார் அட்லீ. ஜவான் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது ஷாருக்கானுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
அட்லீ, தற்போது ஆயிரம் கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்ட படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தில் அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஹாலிவுட் தரத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் ஹீரோயினாக தீபிகா படுகோனே நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது. இப்படத்திற்காக அட்லீக்கு ரூ.100 கோடி சம்பளமாக வழங்கப்படுகிறது.

Share this story