காவல் நிலையத்தில் இயக்குநர் பாலா புகார்

காவல் நிலையத்தில் பாலா புகார்

தனது பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாக, இயக்குநர் பாலா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்

சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாலா, தற்போது 'வணங்கான்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இயக்குனர் பாலா பெயரில் போலியாக கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "எனக்கு எந்த ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கும் இல்லை.. மோசடி நபர்களிடம் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தனது பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாக, இயக்குநர் பாலா கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்  சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாலா, தற்போது 'வணங்கான்' படத்தை இயக்கி வருகிறார். அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், மலையாள நடிகை ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், இயக்குனர் பாலா பெயரில் போலியாக கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

மேலும், இது தொடர்பாக கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள பாலா, தனது பெயரில் போலி கணக்கு தொடங்கி மோசடி செய்பவர் மீது  விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார். 
 

Share this story