‘வணங்கான்’ படத்தை மீண்டும் தொடங்கும் பாலா... புதிய அப்டேட்

vanagaan

'வணங்கான்' படத்தை மீண்டும் பாலா தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முன்னணி இயக்குனரான பாலா நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சூர்யாவை வைத்து 'வணங்கான்' திரைப்படத்தை இயக்கி வந்தார். இந்த படத்தில் தெலுங்கு இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து வந்தார். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது. 

 vanagaan

மீனவர் கதைக்களம் கொண்ட இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி பகுதியில் செட் அமைக்கப்பட்டு நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் சூர்யா - பாலா இடையே மோதல் ஏற்பட்டது கூறப்பட்டது. இதனால் படத்திலிருந்து சூர்யா வெளியேறி அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதேநேரம் கதையில் சில மாற்றங்களை செய்து வந்த பாலா, 'வணங்கான்' படத்தை மீண்டும் தொடங்கிவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

vanagaan

'வணங்கான்' என்ற‌ பெயரிலேயே தொடங்கவுள்ள இந்த படத்தில் சூர்யாவிற்கு அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.  ஏற்கனவே இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்த வந்த நிலையில் அவர் படத்திலிருந்து வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. அதனால் புதிய ஹீரோயினை பாலா தேடி வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் 9-ஆம் தேதி கன்னியாகுமரி பகுதியில் தொடங்கவுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. 

Share this story