'இளையராஜா' பயோபிக்கில் 'தனுஷ்' –பாலிவுட் இயக்குநரின் பல நாள் ஆசை.

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து மொழிகளிலும் சூப்பர் ஹிட் நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பதை கடந்து பாடகர், எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பன்முக திறமைகொண்டவராக உள்ளார். இந்த நிலையில் நடிகர் தனுஷை இளையராஜாவின் பயோபிக்கில் நடிக்கவைக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார், பாலிவுட் இயக்குநர் பால்கி.
இந்த நிலையில் தனுஷை வைத்து ‘ஷமிதாப்’ என்ற படத்தை இயக்கிய இயக்குநர் பால்கி சமீபத்திய பேட்டியில் கூறியதாவது, “ தனுஷ் மிகவும் எளிமையான மனிதர், அவர் ஒரு நடிகர் என்பதை கடந்து பன்முக திறமை கொண்டவர். குறிப்பாக அவரது எழுத்து மற்றும் இயக்கத்திற்கு நான் மிகப்பெரிய ரசிகன். என்னுடைய நீண்டநாள் கனவே தனுஷை வைத்து இளையராஜவின் பயோபிக்கை இயக்கவேண்டும் என்பதுதான். அப்படி நடந்தால் அவருக்கு நான் கொடுக்கும் மிகப்பெரிய பரிசாக அது இருக்கும் ஏனென்றால் அவருக்கும் இளையராஜாவை மிகவும் பிடிக்கும்” என பால்கி தெரிவித்துள்ளார். பால்கியின் இந்த பேட்டி தனிஷ் ரசிகர்கள் மத்தியில் புது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.