இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்...

manoj

இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள அவரது வீட்டில் இன்று (மார்ச் 25) காலமானார். அவருக்கு வயது 48.

இயக்குநர் பாராதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த தாஜ்மஹால் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் அவரது மகன் மனோஜ். தொடர்ந்து அவரது இயக்கத்தில் ஈரநிலம் கடல் பூக்கள் உள்ளிட்ட பாரதிராஜாவின் திரைப்படங்களிலும், அல்லி அர்ஜுனா, மகா நடிகன், சமுத்திரம், வருஷமெல்லாம் வசந்தம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.manoj
 
அண்மையில், மனோஜ் தனது தந்தையின் வழியில் இயக்குநராகி, மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்நிலையில் அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று மாலை அவரது வீட்டில் இருந்தபோது மனோஜுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, மனோஜ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மாரடைப்பால் உயிரிழந்தது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரை உலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share this story

News Hub