"மோலிவுட்" உலகில் கால்பதிக்கும் இயக்குனர் சேரன்..!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சேரன். பன்முக திறமைக்கொண்ட இவர், அவ்வபோது படங்களில் நடித்து சிறப்பாக பணியாற்றி ரசிகர்களை கவர்ந்தார். மேலும் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 4ல் கலந்துகொண்டு மீண்டும் ரசிகர்களிடையே பிரபலமானார்.
இந்நிலையில், மலையாள இயக்குனரான அனுராஜ் மனோகர் இயக்கத்தில், நடிகர் டொவினோதாமஸ் உடன் இணைந்து 'இஸ்க்' படத்தில் தான் நடிக்கவுள்ளதாக இயக்குனர் சேரன் அறிவித்துள்ளார். முதன்முதலாக தனது நீண்டநாள் ஆசையாக இருந்த ஒன்று நிறைவேறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நண்பர்களே... முதன்முதலாக நீண்டநாள் ஆசையாக இருந்த ஒன்று நிறைவேறி இருக்கிறது.. மலையாள திரைப்படம் ஒன்றில் ஆகச்சிறந்த நடிகரான டொவினோதாமஸ் உடன் இணைந்து 'இஸ்க்' படத்தின் இயக்குனரான அனுராஜ் மனோகர் இயக்கத்தில் நடிக்கிறேன்.. என்றும்போல உங்கள் ஆதரவும் அன்பும் தேவை.. நன்றி. pic.twitter.com/6nOyzUg8BN
— Cheran (@directorcheran) July 22, 2024