இரவிலும் சிலரின் கனவிலும் ஸ்டார் ஒளிர்கிறது- இயக்குநர் இளன் நெகிழ்ச்சி

ஸ்டார் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

'ஸ்டார்' படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்புக்கு நன்றி தெரிவித்து படத்தின் இயக்குநர் இளன் கடிதம்  ஒன்றை எழுதியுள்ளார்.

Image

‘பியார் பிரேமா காதல்’ படத்தை இயக்கிய இளன் இயக்கத்தில், கவின், லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஸ்டார் திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகராக வேண்டும் என கனவு காணும் நடுத்தர வர்க்க இளைஞனின் ‘ஸ்டார்’ ஆசை நிறைவேறியதா இல்லையா என்பதை எதார்த்தமாக எடுத்து அசத்தியுள்ளார் இயக்குநர் இளன். 

இந்நிலையில் ஸ்டார் படத்திற்கு கிடைத்து வரும் வரேவேற்புக்கு நன்றி தெரிவித்து இயக்குனர் இளன் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஸ்டார் முதல் நாள் காட்சியில், முகம் அறியா சகோதரன் ஒருவன் ஓடி வந்து கேட்டான் : உங்கள கட்டி புடிச்சுக்கலாமா ? அந்த இரு கணம் அன்பு மட்டுமே வெளிப்பட்டது.

Star (2024) Movie: கதை, நடிகர்கள் மற்றும் பட குழு, வெளியீட்டு தேதி,  டிரெய்லர், இசை, விமர்சனம், செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் -  Filmibeat Tamil.

ஓர் கணவனும் மனைவியும், திரையரங்கை விட்டு விலகவே இல்லை. தேம்பி தேம்பி அழுதாள், நானும் அழுதேன் . அந்த கண்ணீரும் அன்பே. திரையரங்கை சுத்தம் செய்யும் பணி பெண், கன்னத்தை பிடித்து சுத்திப்போட்டது என் தாயின் அன்பை வெளிப்படுத்தியது. பல இடங்களில் கைதட்டலும், கரகோஷமும் "லவ் யூ" என்று சொல்வதாகவே தோன்றியது . இறுதி காட்சியின் வரவேற்பு என்னுள் உள்ள எழுத்தாளனை இன்னும் தைரியசாலியாக மாற்றி உள்ளது. ரோலிங் கிரெடிட்ஸ் போட்டவுடன் எழுந்து செல்வதே வழக்கம். ஆனால், நான் கண்டதோ காதலியை விட்டு பிரிந்து செல்ல மனமில்லாத காதலர்களை தான்.

Loading tweet...


ஒரு சில [ பல ] விமர்சனங்கள், நான் ஒரு கலைஞனாய் மெருகேற உதவுகிறது. நம்பிக்கைக்கு நன்றி. கூட்டம் அலைமோதுகிறது. பகலிலும், மதியத்திலும், இரவிலும் சிலரின் கனவிலும் ஸ்டார் ஒளிர்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Share this story