இசை நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட கவுதம் மேனன்... இணையத்தில் வேகமாக வைரலாகும் வீடியோ !

harris jeyaraj

இசை நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் கௌதம் மேனன் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தமிழ் சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளராக இருக்கும் பலர் இசை கச்சேரிகளை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே ஏ.ஆர் ரகுமான், அனிருத், ஜிவி பிரகாஷ், ஹரிஷ் ஜெயராஜ் உள்ளிட்டோர் இசைக்கச்சேரிகளை நடத்தி வருகின்றனர். இந்த இசைக்கச்சேரிகளை தமிழகத்தில் மட்டுமில்லாமல் பல வெளிநாடுகளிலும் நடத்தி வருகின்றனர். 

harris jeyaraj

குறிப்பாக தமிழர்கள் அதிகம் வாழும் துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இசை கச்சேரிகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் பிரபல இசையமைப்ப்ளரான ஹாரிஷ் ஜெயராஜ் இசை கச்சைரி ஒன்றை நடத்தியுள்ளார். இந்த இசை கச்சேரியில் பல இயக்குனர் கௌதம் மேனன் கலந்துக் கொண்டார். 

harris jeyaraj

அப்போது தனுஷின் 'அனேகன்' படத்தில் இருந்த 'டங்கா மாறி' பாடல் ஒலித்தது. அதற்கு இயக்குனர் கவுதம் மேனன் ரசிகர்களுடன் இணைந்து செம்ம குத்தாட்டம் போட்டார். இது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. 

 


 

Share this story