உலகநாயகனுடன் கூட்டணி அமைக்கும் அஜித் பட இயக்குனர்... புதிய அப்டேட்டால் குஷியான ரசிகர்கள் !

h vinoth and kamal

உலக நாயகன் கமல் விரைவில் எச் வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளர்ந்து வருகிறார் எச் வினாத். ‘சதுரங்கவேட்டை’ படத்தின் மூலம் பிரபலமான இயக்குனராக மாறினார். அதன்பிறகு தீரன் அதிகாரம், நேர்கொண்ட பார்வை, வலிமை என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களை இயக்கினார். 

h vinoth and kamal

தற்போது மூன்றாவது முறையாக ‘துணிவு’ படத்தின் மூலம் அஜித்தை இயக்கி வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதையடுத்து விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை எச் வினோத் இயக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்தது. 

h vinoth and kamal

இந்நிலையில் உலகநாயகன் கமலுடன் எச் வினோத் கூட்டணி வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் கமலை சந்தித்த எச் வினாத், தனது கதையை கூறியதாகவும், அது கமலுக்கு பிடித்ததால் நடிப்பதாக உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ‘இந்தியன் 2’ - ல் நடித்து வரும் கமல் அடுத்து மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு பிறகு எச் வினோத் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Share this story