மீண்டும் இணையும் ஹரி - விஷால் கூட்டணி.. தரமான சம்பவம் காத்திருக்கு

hari and vishal

‘தாமிரபரணி’ படத்தின் வெற்றிக்கு பிறகு ஹரி மற்றும் விஷால் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. 

அதிரடி இயக்குனரான ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தாமிரபரணி’. குடும்ப கதைக்களத்தை கொண்டு ஆக்‌ஷன் அதிரடி திரைப்படமாக உருவான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் பானு, பிரபு, நதியா, நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். நடிகர் விஷாலுக்கு நல்ல ஓபனிங் கொடுத்த படமாக இந்த படம் அமைந்தது. 

hari and vishal

இந்த படத்தின் வெற்றியையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது. இதற்காக அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் கசிந்தள்ளது. 

hari and vishal

முன்னணி நடிகராக இருக்கும் விஷால், தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து கார்த்திக் தங்கவேல் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களை முடித்து ஹரி படத்தில் விஷால் இணைவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ‘யானை’ படத்திற்கு பிறகு விஷால், ஹரி இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story