ஹரியின் புதிய ஸ்டுடியோவை தொடங்கி வைத்த சூர்யா... நிகழ்ச்சியில் குவிந்த சினிமா பிரபலங்கள் !

goodluck studio

ஹரி மற்றும் ப்ரீத்தா தம்பதியினரின் புதிய ஸ்டுடியோவை நடிகர் சூர்யா இன்று தொடங்கி வைத்தார். 

goodluck studio

தமிழ் சினிமாவில் அதிரடி ஆக்சன் திரைப்படங்களுக்கு சொந்தக்காரர் இயக்குனர் ஹரி. 'தமிழ்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார். அதன்பிறகு சாமி, கோவில், அருள், ஐயா, ஆறு, தாமிரபரணி, வேல், வேங்கை, சிங்கம் சீரிஸ் என பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இதில் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கள் படத்தின் மூன்று பாகங்களும் சூப்பர் ஹிட்டடித்தது. 

goodluck studio

இந்நிலையில் பிரபல இயக்குனர் ஹரி மற்றும் ப்ரீத்தா தம்பதியினர் புதிய ஸ்டுடியோ ஒன்றை தொடங்கியுள்ளனர். முன்னணி நடிகர் விஜயகுமாரின் குக் லக் திரையரங்கை மாற்றும் செய்து தற்போது குக் லக் ஸ்டுடியோவாக மாற்றியுள்ளனர். இந்த ஸ்டுடியோவில் ரெக்கார்டிங், டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட பணிகள் நடக்கும் என கூறப்பட்டுள்ளது. 

goodluck studio

இந்த ஸ்டுடியோவை பிரபல நடிகரான சூர்யா இன்று ரிப்பன் கட் செய்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன், தயாரிப்பாளர் ராஜசேகர், இயக்குனர் எஸ்.பி.முத்துராமலிங்கம், ஆர்வி விஜயகுமார், ஸ்ரீதேவி விஜயகுமார் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்துக்கொண்டனர். இதுதவிர தமிழக சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சேகர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

Share this story