"நான் ஏன் குடிப்பழக்கத்தை நிறுத்தினேன் தெரியுமா ?"-பிரபல இயக்குனர் அதிர்ச்சி தகவல்

குக்கூ’, ‘ஜோக்கர்’, ‘ஜிப்ஸி’, ‘ஜப்பான்’ ஆகிய திரைப்படங்களையும், ‘மாடர்ன் லவ் சென்னை’ என்ற வெப்தொடரில் ‘லாலாகுண்டா பொம்மைகள்’ என்ற ஒரு பாகத்தையும் இயக்கியுள்ள ராஜூ முருகன், சில படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.இவர் அன்மையில் குட் டே திரைப்பட விழாவில் கலந்து கொண்டார்
அந்த விழாவில் இயக்குனர் ராஜூ முருகன் பேசும்போது, ‘சில நாட்களுக்கு முன்பு "குட் டே" படத்தை பார்த்தவுடன், கண்டிப்பாக இதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டியது எனது கடமை என்று நினைத்தேன். எழுத்தாளர்கள் ஜி.நாகராஜன், வைக்கம் பஷீர் ஆகியோரின் புத்தகங்களை படித்தது போன்ற உணர்வை இப்படம் ஏற்படுத்தியுள்ளது. குடிப்பதை பற்றிய கதை கொண்ட படமான இது, அந்த குடிக்கான காரணத்தை சமூகம் எப்படி உருவாக்குகிறது என்பதை பற்றி பேசுகிறது. நான் குடிப்பதை நிறுத்தி 10 வருடங்களாகி விட்டது. அதை நினைத்தால் எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.
கடந்த 2009ல் கடைசியாக குடித்தேன். குடி என்பது மீண்டும், மீண்டும் குற்ற உணர்ச்சிகளை மட்டுமே கொடுத்து வருகிறது. இந்த சமூகத்தை பற்றி கவலைப்படலாம். இந்த சமூகம் நமக்கு கொடுக்கக்கூடிய அழுத்தத்தை பற்றி பேசலாம். ஆனால், சீர்திருத்தம் செய்வதற்கு செயல் மட்டுமே முக்கியம். அது எளிமையான செயல், வலிமையான செயல் என்ற அளவீடுகளில் இல்லை. சினிமாவில் சிறிய படம், பெரிய படம் என்பது இல்லை. அது ஏற்படுத்தக்கூடிய தாக்கம்தான் முக்கியம்’ என்றார். ‘