இயக்குனர் கே.விஸ்வநாத் மறைவு.. கமல், இளையராஜா இரங்கல் !

viswanath

இயக்குனர் கே விஸ்வநாத் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன், இளையாராஜ உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இந்திய சினிமாவில் ஜாம்பவனாக இருப்பவர் இயக்குனர் கே.விஸ்வநாத். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அவர், சென்னையில் தனது சினிமா பயணத்தை தொடங்கினார். தமிழில் சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல மொழிகளில் ஏராளமான படங்களில் பணியாற்றியுள்ளார். 

viswanath

93 வயதாகும் அவர், ஐதராபாத்தில் உள்ள இல்லத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்றிரவு மரணமடைந்தார். அவருக்கு மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் உலக நாயகன் கமலுக்கு ஆஸ்தான இயக்குனராக இருந்தவர் கே.விஸ்வநாதன். சமீபத்தில் நடிகர் கமல் ஐதராபாத் சென்ற போது கே.விஸ்வநாத்தை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். தற்போது அவர் மரணமடைந்த நிலையில் தன் கைப்பட இரங்கல் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை கலாதபஸ்வி விஸ்வநாத் நன்கு அறிந்திருந்தார். அவரது படைப்புகள் காலம் கடந்து கொண்டாடப்படும். வாழ்க அவரது கலை. உங்களின் தீவிர ரசிகன் கமல்ஹாசன் என்று குறிப்பிட்டுள்ளார். 


இதேபோன்று இசையமைப்பாளர் இளையராஜாவும் இரங்கல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 

 


 

Share this story