"ரெட்ரோ கதையை முதலில் சூப்பர் ஸ்டாருக்கு தான் எழுதினேன்.." : இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்...

karthik

 "ரெட்ரோ கதையை முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினி சாருக்கு தான் எழுதினேன் எனஇயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். 

 நடிகர் சூர்யா அவரது 44- வது திரைப்படமாக ரெட்ரோ திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரெட்ரோ படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது.

surya

படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  இந்த திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளனர்.   ரெட்ரோ படத்தின் டிக்கெட் முன்பதிவு வரும் 27ஆம் தேதி மாலை 4 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில் ரெட்ரோ ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் இப்படத்தின் கதை பற்றி கார்த்திக் சுப்புராஜ் பேசியிருந்தார். அவர் கூறியதாவது, இந்த கதை விஜய்க்காக எழுதிய கதை இல்லை. ரொம்ப நாளைக்கு முன்னதாகவே இந்த கதையை எழுதிவிட்டேன். ரஜினி சாரை மனதில் வைத்து தான் இக்கதையை எழுதினேன். ரஜினி சாருக்காக எழுதிய போது இது முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் கதையாக இருந்தது. இதை சூர்யா சாரிடம் சொன்னபோது, தலைவருக்காக எழுதிய கதையா என கரெக்ட்டா கேட்டுட்டார். தலைவர் தான் இந்த மாதிரி கதையை பண்ணமுடியும் என்றார். அதன் பிறகு ஆக்ஷன் கதையை சற்று மாற்றி காதல் கதையாக சூர்யா சாரிடம் சொன்னேன் என கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். 

Share this story