திருப்பதியில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சாமி தரிசனம்...!

karthik subburaj

ரெட்ரோ பட வெளியீட்டை முன்னிட்டு திருப்பதியில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சாமி தரிசனம் செய்தார்.  

 இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ரெட்ரோ. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரெட்ரோ படம் நாளை மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது.


 படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், ரெட்ரோ பட வெளியீட்டை முன்னிட்டு திருப்பதியில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சாமி தரிசனம் செய்தார்.  

Share this story