‘லியோ’ படக்குழுவினருடன் பார்ட்டி கொண்டாடிய லோகேஷ்.. வைரலாகும் பர்த்டே புகைப்படங்கள் !

lokesh kanagaraj

‘லியோ’ படக்குழுவினருடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

lokesh kanagaraj

தென்னிந்தியாவில் முன்னணி நடிகர்கள் தேடிப்படும் இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். அவரது இயக்கத்தில் நடிக்கவும், படத்தை தயாரிக்கவும் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர் நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள். ‘மாநகரம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர், கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். 

lokesh kanagaraj

தற்போது விஜய் வைத்து மாஸாக கதைக்களத்தில் உருவாகும் ‘லியோ’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு இந்திய சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சத், திரிஷா, கெளதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

lokesh kanagaraj

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். காஷ்மீரில் ‘லியோ’ படப்பிடிப்பில் இருக்கும் அவர், நேற்றிரவு பிறந்தநாள் பார்ட்டி கொண்டாடினார். அதில் சஞ்சத் தத், திரிஷா மற்றும் லியோ படக்குழுவினருடன் பங்கேற்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

lokesh kanagaraj

lokesh kanagaraj

lokesh kanagaraj

Share this story