சொகுசு கார் வாங்கிய லோகேஷ் கனகராஜ்.. என்ன கார் தெரியுமா ?

lokesh

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். 

தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். முன்னணி ஹீரோக்கள் போட்டிப்போட்டு நடிக்க விரும்பு இயக்குனராக தற்போது உலா வருகிறார். ‘மாநகரம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர், ‘கைதி’, ‘மாஸ்டர்’ உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்துள்ளார். 

lokesh

கடைசியாக அவர் இயக்கிய ‘விக்ரம்’ திரைப்படம் உலக நாயகன் கமலஹாசனுக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதனால் ஏற்பட்ட மகிழ்ச்சியில் நடிகர் கமலஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு கார் ஒன்றை பரிசாக வழங்கினார். 80 லட்சம் மதிப்புள்ள அந்த கார் Lexus நிறுவனத்தின் விலை உயர்ந்த சொகுசு கார் ஆகும். 

lokesh

இந்நிலையில் விஜய் நடிப்பில் உருவாகும் ‘லியோ’ படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ், BMW 7 சீரிஸ் சொகுசு காரை ஒன்றை வாங்கியுள்ளார். 2 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த கார் 100 கிலோ மீட்டர் தூரத்தைக்கூட எளிதாக கடந்துவிடும். பிரத்யேக வசதிக் கொண்ட அந்த காரை ஸ்மார்ட்போனை கொண்டே இயக்கமுடியும். 

 

Share this story