"பக்கா மாஸ் ஆக்ஷன் படம்" - 'லியோ' குறித்து செம்ம அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ் !

விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'லியோ' படம் குறித்து முக்கிய அப்டேட்டை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கொடுத்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'. இந்த படம் ஆயுதப்பூஜையையொட்டி வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் தனியார் இணையத்தளத்தின் விருது வழங்கும் விழாவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பங்கேற்றார். அப்போது பிளடி ஸ்வீட் என்றால் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 'விக்ரம்' படத்தில் வந்த 'ஆரம்பிக்கலாங்கள' என்ற வார்த்தை போன்று 'லியோ' படத்தில் வரும். படம் வரும்போது பார்த்து என்ஜாய் பண்ணுங்க என்று கூறினார்.
மேலும் பேசிய அவரின் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு குறித்து அப்டேட் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இந்த படம் பக்கா மாஸ் ஆக்ஷன் படமாக இருக்கும். முதற்கட்டமாக காஷ்மீரில் 60 நாட்கள் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. இதையடுத்து மீண்டும் 60 நாட்கள் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. அத்துடன் மொத்த படப்பிடிப்பும் நிறைவுபெற்று திட்டமிட்டபடி படம் வெளியாகும் என கூறினார்.
As per @Dir_Lokesh, #LEO is set to be an all out action movie and it will be wrapped up within the next 60 days 🥳pic.twitter.com/AdR7mwmdog
— LetsCinema (@letscinema) April 2, 2023