எல்லாவற்றிற்கும் நன்றி... விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி !

Lokesh kanagaraj

தனது பிறந்தநாளில் நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சி பதிவு ஒன்றை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். 

 

 மாநகரம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக மாறிவிட்டார். கைதி, மாஸ்டர் ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு உலக நாயகன் கமலை வைத்து ‘விக்ரம்’ படத்தை இயக்கினார். இந்த படம் வெளியாகி இந்தியா முழுவதும் பேசப்படும் படமாக மாறியது. இந்த படத்திற்கு பிறகு லோகேஷின் மார்க்கெட் பெரிய அளவில் உயர்ந்துவிட்டது. 

Lokesh kanagaraj

இந்தப் படத்தை அடுத்து விஜய் வைத்து 'லியோ' படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் சஞ்சய் தத், திரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படம் ஆயுதப்பூஜையையொட்டி வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

Lokesh kanagaraj

இதற்கிடையே தனது பிறந்தநாளை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் காஷ்மீரில் கொண்டாடினார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் சஞ்சய் தத், திரிஷா மற்றும் 'லியோ' படக்குழுவினர் பங்கேற்றனர். இந்நிலையில் தனது பிறந்தநாளையொட்டி நடிகர் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ''எல்லாவற்றிற்கும் நன்றி விஜய் அண்ணா'' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை விஜய் ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர். 

Share this story