' மாவீரன்' சூப்பர் ஹீரோ படம் அல்ல' - இயக்குனர் மடோன் அஸ்வின் !

maaveeran

'மாவீரன்' திரைப்படம் சூப்பர் ஹீரோ திரைப்படம் அல்ல என்று இயக்குனர் மடோன் அஸ்வின் தெரிவித்துள்ளார். 

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'மாவீரன்' திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் பிரபல திரையரங்கு ஒன்றில் 'மாவீரன்' படத்தை பார்த்த இயக்குனர் மடோன் அஸ்வின் செய்தியாளர்களிடம் பேசினார். அதில் மாவீரன் படத்திற்கு நல்ல ஓபனிங் கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி. என்னுடைய முதல் படத்தை திரையரங்கிற்கு சென்று பார்த்தேன். 'மண்டேலா' படத்திற்கு அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. 

maaveeran

சில நிகழ்வுகளை மையப்படுத்தி தான் இந்த படத்தை எடுத்துள்ளோம். யாரையும் காயப்படுத்தி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். அரசியல் ரீதியாக எந்த கருத்தையும் இந்த படத்தில் திணிக்கவில்லை. கேபி பார்க் ஹவுஸ் போர்டு பிரச்சினையை ரெஃப்ரன்ஸாக எடுத்துள்ளோம். யாரையும் குறிப்பிட்டு இந்த படத்தை எடுக்கவில்லை. 

உதயநிதி இந்த படத்தை பார்த்து பாராட்டினார். அதேபோன்று நடிகர் விஜய் சேதுபதி டப்பின் போது படத்தை ரசித்து பார்த்தார். இது சூப்பர் ஹீரோ திரைப்படம் கிடையாது‌. ஒரு பேண்டஸி திரைப்படமாக உருவாக்கியுள்ளது.  ஒவ்வொருவருக்குள்ளேயும் ஒரு குரல் கேட்கும். நம்மை சுற்றி நடக்கும் அநியாயங்களை தட்டிக்கேட்க வேண்டும் என நம்முள் ஒலிக்கும் குரல் வெளியே வரவேண்டும் என்ற ஐடியாவோடு தான் இந்த படத்தை உருவாக்கினோம் என்று கூறினார். 

Share this story